Home இலங்கை அரசியல் ரணில் – மகிந்த – கோட்டாபயவின் குடியுரிமை பறிப்பதில் சிக்கல்

ரணில் – மகிந்த – கோட்டாபயவின் குடியுரிமை பறிப்பதில் சிக்கல்

0

அநுரகுமார திசாநாயக்கவின் அரசாங்கத்தில் ரணில், மகிந்த, கோட்டாபய ராஜபக்சவின் குடியுரிமையை பறிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரணிலின் குடியுரிமையை பறிக்காவிடின் நிச்சயமாக சர்வதேச நாடுகளின் ஆதரவினை பெற்று அநுரகுமார அரசாங்கத்திற்கு பெரும் குடைச்சலை ரணில் தரலாம் என்றும் கூறப்படுகின்றது.

இவ்வாறான பின்னணியில் ரணில் செய்யத்தவறிய நிறைய விடயங்களை அநுரகுமார முன்னெடுக்க அவருக்கு சில கைக்கட்டுகள் உள்ளமையினால், முக்கிய வழக்குகளை சட்டம், நீதியின் பக்கம் திருப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இருப்பினும், ரணில் குறித்து நீதிமன்றம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அதனை அமெரிக்கா நேரடியாக தடுக்கும் எனவும், மகிந்த குறித்து நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் சீனா தடுக்கும் என்றும் அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாமல் ராஜபக்ச பல ஊழல் மோசடிகளில் சிக்கியுள்ள நிலையில், சமல் ராஜபக்சவை தவிர ஏனைய அனைத்து ராஜபக்சக்களும் தண்டிக்க கூடியவர்கள் என்றும் கூறப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலின் பின்னர் இலங்கையில் முனனெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள், திருப்பு முனைகள் மற்றும் உண்மைகளை இலங்கையில் இருக்கும் அரசியல் ஆய்வாளர் எம்.எம் .நிலாம்டீனின் பல தகவல்களுடன் அலசி ஆராய்கிறது இன்றைய ஊடறுப்பு நிகழ்ச்சி,

NO COMMENTS

Exit mobile version