பிக் பாஸ் பவித்ரா
பிக் பாஸ் 8ல் வலிமையான போட்டியாளர்களில் ஒருவர் பவித்ரா. முதல் சில வாரங்களில் யாருக்கும் தெரியாத போட்டியாளராக இருந்த பவித்ரா, கடந்த சில வாரங்களாக வெறித்தனமாக ஆட்டத்தை ஆடி வருகிறார்.
குறிப்பாக செங்கலா செங்கலா டாஸ்கில் இவருடைய ஆட்டம் அனைவராலும் பாராட்டப்பட்டது. நடிகை பவித்ரா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி, ஈரமான ரோஜாவே, தென்றல் வந்து என்னை தொடும் ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார்.
தமிழகத்தில் மாபெரும் வெற்றியடைந்த முஃபாசா: தி லயன் கிங்.. வசூல் எவ்வளவு தெரியுமா
இதில் இவர் நடிப்பில் கடைசியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வெற்றியடைந்த சீரியல் தென்றல் வந்து என்னை தொடும். இந்த சீரியலில் வினோத் ராஜ் உடன் இணைந்து ஜோடியாக பவித்ரா நடித்திருந்தார்.
பாராட்டிய நடிகை அனுஷ்கா
இந்த நிலையில், தென்றல் வந்து என்னை தொடும் சீரியலை பார்த்துவிட்டு, நடிகர் வினோத் ராஜ் மற்றும் பவித்ரா இருவருக்கும் போன் கால் செய்து பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா. இது பலருக்கும் தெரியாத விஷயம் தான்.
இந்த தகவலை மேடை ஒன்றில் வினோத் ராஜ் மற்றும் பவித்ரா இருவரும் நடிகை அனுஷ்கா தங்களை போனில் அழைத்து பாராட்டியதாக கூறியுள்ளார். மேலும் தங்களது சீரியலின் பெரிய ரசிகை நான் என்றும் அவர் கூறினாராம்.
அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது, இதோ நீங்களே பாருங்க..
#Pavithra & #Vinoth TVET team got appreciation from #AnushkaShetty ❤️👑👏🏻👏🏻🧿🧿🧿🧿#BiggBossTamil8 #BiggBoss8Tamil pic.twitter.com/9az3gXdmTt
— Wonder Tweet (@wonder_tweetA) November 30, 2024