Home இலங்கை அரசியல் ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

ஜிம்மி கார்டரின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர இரங்கல்

0

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி கார்டரின் (Jimmy Carter) மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமது எக்ஸ் தளத்திலேயே இதனை பதிவிட்டுள்ளார்.

அமைதிக்கான நோபல் பரிசு

குறித்த பதிவில், ஜிம்மி கார்டரின் வாழ்க்கை சமாதானம், மனித உரிமைகள் மற்றும் மனிதாபிமான விவகாரங்கள் ஆகியவற்றில் அசைக்க முடியாத அர்ப்பணிப்பால் குறிக்கப்பட்டது.

2002ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது, ​​உலகளாவிய சமாதானத்தை மேம்படுத்துவதில் ஜிம்மி கார்ட்டரின் முயற்சிகள் சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்டதாக ஜனாதிபதி அநுர குறிப்பிட்டுள்ளார்

NO COMMENTS

Exit mobile version