Home முக்கியச் செய்திகள் ஆசிரியர் உதவியாளர் ஆட்சேர்ப்பு : கோரப்பட்டது விண்ணப்பம்

ஆசிரியர் உதவியாளர் ஆட்சேர்ப்பு : கோரப்பட்டது விண்ணப்பம்

0

நாட்டின் பெருந்தோட்டப்புற தமிழ் மொழிமூலப் பாடசாலைகளுக்கு பாடசாலை அடிப்படையில் ஆசிரியர் உதவியாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தகைமைகளைக் கொண்டோரிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

இதற்கான விண்ணப்பப்படிவம் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் www.doenets.lk என்ற இணையத் தளத்தின் “Our Services” இன் கீழ் உள்ள “Online Applications – Recruitment Exams” எனும் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை

விண்ணப்பப்படிவங்களை நிகழ்நிலை (Online) முறையூடாக மாத்திரமே சமர்ப்பிக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவங்கள் எதிர்வரும் 2024.07.12 ஆம் திகதியன்று பி.ப 09.00 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும். மேலும் இதற்கான பரீட்சை 2024, ஓகஸ்ட் மாதத்தில் நடாத்தப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. 

Source: https://ibctamil.com/article/application-requested-for-teaching-assistant-1718437130?itm_source=parsely-popular

NO COMMENTS

Exit mobile version