Home இலங்கை அரசியல் 10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகருக்கான நியமனம் இன்று!

10 ஆவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகருக்கான நியமனம் இன்று!

0

பத்தாவது நாடாளுமன்றத்தின் புதிய சபாநாயகராக பதவியேற்ற அசோக சபுமல் ரன்வல பதவி விலகியதால் ஏற்பட்ட வெற்றிடத்துக்கான சபாநாயகர் நியமனம் நடைபெற உள்ளது.

புதிய சபாநாயகர் நியமனத்திற்காக நாடாளுமன்றம் இன்று (17ம் திகதி) காலை 9.30 மணிக்கு பிரதி சபாநாயகர் கலாநிதி ரிஸ்வி சாலி தலைமையில் கூடவுள்ளது.

இதன்படி, ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து தேசிய பட்டியல் மூலம் பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப்பிரமாணம் செய்து கொண்டதன் சபாநாயகர் நியமனம் நடைபெறும்.

ரகசிய வாக்கெடுப்பு 

புதிய சபாநாயகர் பதவிக்கு ஒரு பொது பிரதிநிதியின் பெயர் மட்டுமே முன்மொழியப்பட்டிருந்தால், அந்த மக்கள் பிரதிநிதி நியமிக்கப்படுவார் என்றும், இரண்டு பெயர்கள் முன்மொழியப்பட்டால், ரகசிய வாக்கெடுப்பு நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சபாநாயகர் பதவிக்கு பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலி, கலாநிதி ஜகத் விக்ரமரத்ன, லக்ஷ்மன் நிபுணராச்சி மற்றும் நிஹால் கலப்பிட்டி என பலரின் பெயர்களும் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

சபாநாயகராக கடமையாற்றிய அசோக ரன்வல கடந்த 13ஆம் திகதி தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்து பதவி விலகியமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version