Home சினிமா கங்குவா பிளாப் பற்றி கேள்வி.. தெலுங்கு பத்திரிகையாளருக்கு விஜய் சேதுபதி காட்டமான பதிலடி

கங்குவா பிளாப் பற்றி கேள்வி.. தெலுங்கு பத்திரிகையாளருக்கு விஜய் சேதுபதி காட்டமான பதிலடி

0

நடிகர் விஜய் சேதுபதி தற்போது விடுதலை 2 படத்தின் ப்ரோமோஷனுக்காக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வருகிறார். வரும் டிசம்பர் 20ம் தேதி இந்த படம் திரைக்கு வருகிறது.

தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெலுங்கு ப்ரோமோஷனை விடுதலை 2 படக்குழு செய்திருந்தது.

கங்குவா கேள்வி.. கோபமான விஜய் சேதுபதி

மேலும் விஜய் சேதுபதி கொடுத்த ஒரு பேட்டியில் தெலுங்கு பத்திரிகையாளர் அவரும் கங்குவா படம் தோல்வி அடைந்தது பற்றி கேள்வி எழுப்ப அதற்கு VJS கோபமாக பதில் கொடுத்து இருக்கிறார்.

‘நான் என் பட ப்ரோமோஷனுக்கு வந்திருக்கிறேன். இதை பற்றி நான் ஏன் பேச வேண்டும். எல்லா படமும் வெற்றி அடைய வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் எடுக்கிறார்கள். ஒரு சின்ன ஹோட்டல் தொழிலாக இருந்தாலும் அது வெற்றி பெற என்கிற ஒரே நோக்கத்தில் தான் செய்வார்கள்.’

‘நானும் தோல்வியை சந்தித்து இருக்கிறேன். ட்ரோல்களை பார்த்திருக்கிறேன்’ என விஜய் சேதுபதி பதில் கொடுத்து இருக்கிறார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

NO COMMENTS

Exit mobile version