Home இலங்கை அரசியல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன் நியமனம்

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன் நியமனம்

0

கிளிநொச்சி (Kilinochchi) மாவட்ட அரசாங்க அதிபராக எஸ்.முரளீதரன் (S.Muralitharan) இன்று (04.07.2024) தனது கடமைகளை
பொறுப்பேற்றுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபராக கடமையாற்றிய றூபவதி கேதீஸ்வரன் ஓய்வு பெற்ற
நிலையில், மேலதிக அரசாங்க அதிபராக பணியாற்றி வந்த எஸ்.முரளீதரன் பதில் அரசாங்க
அதிபராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், நேற்று பிரதமர் தினேஷ் குணவர்தன (Dinesh Gunawardene) அவருக்கு அரச அதிபர்
நியமனத்தினை வழங்கியிருந்தார்.

புதிய நியமனம்

புதிய நியமனம் பெற்று கடமைகளை பொறுப்பேற்க வருகை தந்த புதிய அரசாங்க அதிபரை
மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும், சிவில் அமைப்பினரும் இணைந்து பிள்ளையார்
ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்களுடன் வரவேற்றுள்ளனர்.

அதனைத் தொடர்ந்து, அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

NO COMMENTS

Exit mobile version