Home இலங்கை சமூகம் சுகாதாரத்துறை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா

சுகாதாரத்துறை தொடர்பில் விசனம் வெளியிட்டுள்ள வைத்தியர் அர்ச்சுனா

0

இலங்கையில் நடந்த இமினோ குளோபின் மற்றும் இதர பல கொள்ளை சம்பவங்களில்
எங்களுடைய சுகாதாரத் துறை ஒருமுறை ஆட்டம் கண்டது என வைத்தியர் அர்ச்சுனா தெரிவித்துள்ளார்.

மேலும்,  ஒவ்வொரு தடவையும் நாம் முயற்சிக்கின்ற நேரங்களில் சுகாதாரத்
துறையில் வைத்தியர்களுக்கான உரிமையை பெறுகின்றோம் என்ற அடிப்படையில் தொழிற்சங்கம் என்ற பெயர்களில் வைத்திய அதிகாரிகள் சங்கம் செய்கின்ற
மக்கள் தொடர்பான அடாவடித்தனங்கள் ஒரு கட்டுக்கடங்காமல் போய் சுகாதாரத்துறை ஒரு
மருத்துவ மாபியாக்களின் கூடாரமாக ஒரு தொழிற்சங்கங்களின் கூடாரமாக அழிந்து
போனது வரலாறு எனவும் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்ட நேற்று(13)முகநூல் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

உயிருக்கு அச்சுறுத்தல்

அதில்
மேலும் அவர் குறிப்பிடுகையில்,

நேற்றைய தினம் என்னை சுகாதார அமைப்புக்கு அழைத்து முதல் மணித்தியாலத்தில்
என்னிடம் சொல்லப்பட்டது, என்னுடைய வேலை இனிமேல் பரிபோகும் சாத்திய கூறு உண்டு.

அது தவிர என்னுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டு என்று
மதிப்புக்குரிய சுகாதார செயலாளர் மற்றும் இதர பல உத்தியோகத்தர்கள் அதிகாரிகள்
என்னை எனது மனவலிமையை பரிசோதித்துப் பார்த்தார்கள்.

ஆனால் மூன்றரை மணித்தியாலம் நீடித்த இந்த கூட்டம், கூட்டமென்று சொல்வதை விட
நமது தலைவரை இந்தியா எவ்வாறு அழைத்து பேச்சு வார்த்தை என்ற பெயரில் ஒரு தனி
அறையில் அடைத்தார்களோ அதே இதே போன்ற தொனியில் அதிகாரமாக என்னை மிரட்ட வைக்க
முயன்றார்கள்.

ஆனால் அப்போது என்னால் சொல்லப்பட்ட விடயம் இந்த சந்திப்பு மற்றும் இதில்
பேசப்பட்ட எந்த விடயங்களும் நான் பிழையான வழியில் பொதுவெளியில் பகிரப்
போவதில்லை என்று.

ஆனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி அதுமட்டுமன்றி
எனது வேலை அடிப்படை உரிமை என்று தெரிந்தும் பொய்யான காரணங்களுக்காக தங்களால்
என்னை அச்சுறுத்த முடியுமாயின் தாங்கள் அச்சுறுத்தி உள்ள விடயத்தை நான் பொது
வெளிக்கு கொண்டு வருவேன் என்று கூறினேன்.

துணிவை எனது தந்தை 38 வருடங்களுக்கு
முன்னமே சொல்லித் தந்து விட்டு தான் போயிருந்தார். எனது தந்தையின் வரலாற்றை
கூட மிகத் தெளிவாக அவர்களிடம் நான் சொல்லி இருந்தேன்.

வைத்தியசாலைகளில் நடக்கும் கொடூரங்கள் 

இரண்டாவது மூன்றாவது மணித்தியாளங்கள் மிகவும் அன்பானவையாகவும் இரு மனங்களும்
ஒத்து நடந்தது.

யாழ்ப்பாணத்தில் நடக்கின்ற சுகாதார வைத்திய அதிகாரிகள்
சங்கத்தின் தன்னிச்சையான செயற்பாடுகள் மற்றும் வைத்தியர்களின் இடமாற்றம்
சம்பந்தமான அடாவடித்தனங்கள் வைத்தியசாலைகளில் நடக்கும் கொடூரங்கள் பிணங்களை
தின்று பணம் வேண்டும் சந்தர்ப்பங்கள் பாதிக்கப்பட்ட வைத்தியர்களுக்கோ
தாதியர்களுக்கோ நோயாளர்களுக்கோ நீதி மறுக்கப்பட்ட தன்மையை நான் தெளிவாக
அவர்களுக்கு அவர்களது மொழியிலேயே சொல்லிக் கொடுத்தேன்.

அதன்பின்பு தான்
அவர்களுக்கு யாழ்ப்பாணத்தின் நிலைமை நன்றாக தெரிந்து கொண்டது.

அது தவிர இந்த சுகாதாரத் துறைக்கான நூல் எழுச்சி போராட்டத்திற்கு முக்கியமாக
வடக்கும் கிழக்கு மாகாணத்தில் இந்த சுகாதார தன்னிச்சையாக நடைபெறுவது
என்பதையும் வைத்தியர் கேதீஸ்வரன் ஐயா மற்றும் சத்தியமூர்த்தி ஐயா அவர்கள்
தன்னிச்சையாக பல பேருக்கு அநீதி விளைத்ததையும் அது தவிர வைத்தியர் மயூரன்
போன்றோர்கள் அடித்தும் துவைத்தும் வைத்தியசாலையை நடத்துகின்ற தன்மையை நான்
தெளிவாகச் சொல்லிக் கொண்டேன்.

இறுதியாக இந்த மாற்றத்தை பொதுமக்கள் வேண்டுகிறார்கள் அதில் எனது பங்கு என்ன
இது அரசியலா இது அரசியலாக இவ்வாறு மாற்றப்படுகிறது இதன் பாதிப்புகள்
பொதுமக்களை எவ்வாறு அடையும் என்ற எல்லா விதங்களையும் நான் அவர்களுக்கு தனியாக
நின்று எடுத்துரைத்தேன்.

இந்த சுகாதார மாற்றத்துக்கு எனது வேலையோ உயிரோ போனாலும் நான் அடிபணிய
போவதில்லை என்றதை அவர்கள் மிகத் தெளிவாகத் தெரிந்து கொண்டதுடன் இந்த மாற்றம்
படிப்படியாக செய்ய வேண்டும் மாறாக உடனடியே செய்ய முடியாது என்பதை வைத்தியநாதன்
மதிப்பிற்குரிய பாதித்த மகிபால அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

பொது மக்களின் சுகாதார உரிமை

ஆனாலும் நான் அவர்களிடம் பெற்ற வாக்குறுதி இந்த சந்தர்ப்பத்திலும் குற்றம்
சாட்டப்பட்டவர்கள் தொடர்ந்து சேவையில் நீடித்தால் குற்றங்கள் மறைக்கப்படும்
என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இன்று சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கம் ஒரு பல்லை இழந்த பாம்பாக
இன்னொரு பல்லுடன் சுகாதாரச் செயலாளரை சந்தித்து சுகாதார அமைச்சருக்கே ஒரு
மிரட்டலை விடுத்திருக்கிறது என்பதை நான் பொது மக்களின் சுகாதார உரிமைக்கு
எடுக்கப்படும் குந்தகமாகவே பார்க்கின்றேன்.

சுகாதாரத் துறையில் இருந்து அடாவடித்தனமான சுகாதார தொழிற்சங்க நடவடிக்கைகள்
நிறுத்தப்பட்டு மக்களுடைய சுகாதாரத் தேவை என்பது ஒரு அத்தியாவசிய சேவையாக
மாற்றப்பட வேண்டும் என்பதை நான் எப்போதே முடிவெடுத்துக் கொண்டேன்.

அந்த மாற்றத்திற்கு சுகாதார அமைச்சர் இணங்கி கொண்டாலும் தங்களது பதவிகள்
இதனால் பறிக்கப்படும் என்ற அச்சத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க
முடியவில்லை.

ஆனால் வேலையையும் எனது உயிரையும் துச்சமாக நான் மதித்து இந்த சுகாதாரத்
துறைக்கான ஒரு விடியலை நோக்கிய எமது மக்களின் பயணத்தை முஸ்லிம் தமிழ் சிங்களம்
என்ற அடிப்படையில் பார்க்காமல் இனவாதம் பேசாமல் அரசியலாக்காமல் மிக ஆணித்தரமாக
வைத்தியர்களுடைய நலனை முன்னிறுத்தி மேலும் வைத்தியர்கள் வெளிநாட்டில் இருந்து
வந்து நிம்மதியாக வேலை செய்யக்கூடிய உறுதியான சுகாதார கட்டமைப்பை உடனடியாக
நிறுவ வேண்டும் என்ற குறிக்கோளில் இந்தப் பாதையில் பயணிக்கின்றேன்.

யாராவது இந்த தமிழ் மொழிபெயர்ப்பை சிங்களத்தில் மொழிபெயர்த்து அதனை சிங்கள
மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் ஆயின் எமது இலங்கையில் சுகாதாரத்துறை
வைத்தியர்களுடைய நலன் தாதிகளின் நலன் பாதுகாக்கப்பட்டு அமெரிக்கா இங்கிலாந்து
போன்ற தொழிற்சங்கங்கள் நிர்வாகிக்க முடியாத ஒரு சுகாதார கட்டமைப்பை நாங்கள்
நிறுவுவோம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version