மாகந்துரே மதுஷின் சடலம் புதைக்கப்பட்ட கொடிகமுவ பொது மயானத்திற்கு முன்பாக அவரது புகைப்படத்துடன் கூடிய பதாகை காட்சிப்படுத்தப்பட்டதையடுத்து குறித்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
குறித்த பதாகையில் “அண்ணா ஒவ்வொருவராக அனுப்புகிறோம். நாங்கள் வரும் வரை பார்த்துக் கொள்ளுங்கள்” என்று எழுதப்பட்டிருந்நது.
காவல்துறை விசாரணை
இந்த பதாகையினை யார் வைத்து சென்றது பற்றி தெரியாத நிலையில், காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட கிளப் வசந்த என அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் இறுதிக் கிரியைகள் அவரது குடும்ப உறுப்பினர்களின் பங்கேற்புடன் இன்று (13) பொரளை பொது மயானத்தில் இடம்பெற்றது.
இதேவேளை, வசந்தாவின் பூர்வீக கிராமமாக இருந்த நுவரெலியா நகரமும் வெள்ளைக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.