எதிர்வரும் அதிபர் தேர்தலுக்கான சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) வேட்பாளரின் நியமனம் இம்மாத இறுதியில் மேற்கொள்ளப்படும் அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் என நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
அதிபர் தேர்தலுக்கான வேட்பாளரை நியமிப்பதற்கு ஏன் தாமதம் ஏற்பட்டது என ஊடகவியலாளர்கள் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
அத்துடன், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் பொறிமுறையானது அதிபரை் வேட்பாளரை 4 முதல் 6 வாரங்களுக்குள் வெற்றிபெறச் செய்யும் அளவுக்கு பலமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கட்சியின் கொள்கை
இதேவேளை, குழப்பத்தின் மத்தியில் அதிபர் வேட்பாளர் நியமிக்கப்பட மாட்டார் எனவும் கட்சியின் கொள்கைக்கு இணங்குகின்ற வேட்பாளரை இம்மாத இறுதியில் நியமிக்கவுள்ளதாகவும், வேட்பாளரை நியமிப்பதில் அவசரம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் கட்சிப் பொறிமுறையானது மிகவும் பலமாக இருப்பதாகவும், அதிபர் தேர்தல் அறிவிக்கப்பட்ட 4 முதல் 6 வாரங்களுக்குள் அந்த வேட்பாளரை வெற்றிபெறச் செய்ய முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.