Home இலங்கை அரசியல் வைத்தியர்களான கேதீஷ்வரன் – சத்தியமூர்த்தியின் திட்டமிட்ட ஊழல்: சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா!

வைத்தியர்களான கேதீஷ்வரன் – சத்தியமூர்த்தியின் திட்டமிட்ட ஊழல்: சபையில் வெளிப்படுத்திய அர்ச்சுனா!

0

வடக்கு பிரதேசத்தில் சுகாதாரத் துறையில் பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வெளிப்படுத்தியுள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்துக்கான விவாதத்தின் போதே அர்ச்சுனா இதனை வெளிப்படுத்தினார்.

வைத்தியர் கேதீஷ்வரன், வைத்தியர் லியனகே, வைத்தியர் சமன் பத்திரண மற்றும் வைத்தியர் சத்தியமூர்த்தி ஆகியோர் இணைந்து மேற்கொண்டதாகக் கூறப்படும் ஊழல் சம்பவம் தொடர்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி 

மேலும் கருத்து தெரிவித்த அவர், “ வடக்கு மாகாணத்தில் பருத்தித்துறை வைத்தியசாலையில் இடம்பெற்ற பாரிய ஊழல் மோசடி தொடர்பான கணக்காய்வு அறிக்கை என்னிடம் உள்ளது.

தங்களுடைய சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ வடக்கின் நான்கு வைத்தியர்களிடம் இலஞ்சம் பெற்றதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளன.

10 வேலைத்திட்டங்கள் வடக்கு மாகாண சபையின் அனுமதியின்றி வைத்தியர் கேதீஷ்வரனால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தனியார் நிறுவனமொன்றை தாங்களே அமைத்து அதிலிருந்து வரும் வருமானத்தை தனியார் வங்கியில் வைப்பிலிட்டுள்ளனர். ” என வெளிப்படுத்தியுள்ளார்.

https://www.youtube.com/embed/DtzhR7yu2Lw

NO COMMENTS

Exit mobile version