Home இலங்கை அரசியல் அநுர அரசுக்கு எதிரான பேரணியில் விமல் வீரவன்ச தரப்பு பங்கேற்குமா… வெளியான அறிவிப்பு

அநுர அரசுக்கு எதிரான பேரணியில் விமல் வீரவன்ச தரப்பு பங்கேற்குமா… வெளியான அறிவிப்பு

0

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எதிராக நவம்பர் 21 ஆம் திகதி எதிர்க்கட்சிகள் முன்னெடுக்கவுள்ள எதிர்ப்பு பேரணியில் விமல் வீரவன்சவின் (Wimal Weerawansa) கட்சி பங்கேற்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, குறித்த பேரணியில் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி (National Freedom Front) பங்கேற்க போவதில்லை என அறிவித்துள்ளது.

கட்சியின் தலைவர் விமல் வீரவன்ச வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எடுக்கப்பட்ட முடிவு 

அத்துடன் பல காரணிகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கட்சி தெரிவித்துள்ளது.

இதேவேளை குறித்த எதிர்ப்பு பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) பங்கேற்க மாட்டார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version