Home முக்கியச் செய்திகள் சபையில் மீண்டும் மறுக்கப்பட்ட அர்ச்சுனா எம்.பியின் பேச்சுரிமை! தகாத வார்ர்தையால் சர்ச்சை

சபையில் மீண்டும் மறுக்கப்பட்ட அர்ச்சுனா எம்.பியின் பேச்சுரிமை! தகாத வார்ர்தையால் சர்ச்சை

0

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகள் தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் (Ramanathan Archchuna) உரையாற்ற முயற்சித்த போதும், அதனை ஆளும் கட்சி ஏற்றுக்கொள்ளவில்லை.

இன்றைய (12.11.2025) நாடாளுமன்ற அமர்வின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் விதிமுறைகளுக்கு மாறாக அவரின் முயற்சி அமைந்ததாகக் கூறி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவும், சபை முதல்வர்  பிமல் ரத்நாயவும் அதனை நிறுத்தினர்.

இந்தநிலையில் சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, இது தொடர்பில் தெளிவுபடுத்தல்களை வழங்கியிருந்தார்.

அத்தோடு, நாடாளுமன்றத்தில் தன்னை தகாத வார்த்தைகளில் விழித்து பேசியதால் தனது வரப்பிரசாதங்கள் மீறப்பட்டுள்ளதாக அர்ச்சுனா ராமநாதன் கடிதம் மூலம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

08.11.2025 வரவு செலவுத் திட்ட விவாதத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற செயலாளருக்கு ஏற்கனவே அறிவித்துள்ளேன்.

அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக விழித்து பேசிய தகாத வார்த்தைகளை ஹன்சாட்டில் இருந்து அகற்றுமாறும். எதிர்காலத்தில் அவ்வாறு செயற்படாதவாாறு நடவடிக்கை எடுக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது என்றார். 

https://www.youtube.com/embed/yOjZlvUogdg

NO COMMENTS

Exit mobile version