Home முக்கியச் செய்திகள் யாழில் ஆவா குழு தலைவர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது!

யாழில் ஆவா குழு தலைவர் உள்ளிட்ட இருவர் அதிரடி கைது!

0

யாழ்ப்பாணத்தில் வன்முறைச் செயல்களில் ஈடுபடும் ஆவா குழுவின் தலைவரான வினோத் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த இருவரும் நேற்றையதினம் (11) சுன்னாகம் காவல்துறையினரால் கைது
செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து மேலும் தெரியவருகையில், “ஆவா குழு வினோத் என்பவர் 2 கிராம் 400 மில்லிகிராம் ஹெரோயினுடனும், அவரது சகா
ஒரவர் கைக்குண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

காவல்துறையினர் சுற்றிவளைப்பு

சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இருவரும் வெவ்வேறு
இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான
நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.youtube.com/embed/b6arrZ-3xK4

NO COMMENTS

Exit mobile version