நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா (Ramanathan Archchuna) யாழ். போதனா வைத்தியசாலை விவகாரம் தொடர்பாக பேசுவதற்கு அனுமதி தருமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இன்றைய (18) நாடாளுமன்ற அமர்வின் போதே அர்ச்சுனா இந்தக் கோரிக்கையை விடுத்திருந்தார்.
எனினும் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன (Jagath Wickramaratne) நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் கோரிக்கையை நிரகாரித்து அவர் பேச முற்பட்ட போது இடைமறித்தார்.
இங்கு உரையாற்றிய அர்ச்சுனா, ”உறுப்புரை பிரிவு 19 இன் படி யாழ் போதனா வைத்தியசாலை (Teaching Hospital Jaffna) விவகாரம் பொது முக்கியத்துவம் வாய்ந்த அவசர விடயம் ஆகும்.
இரு சில தினங்களுக்கு முன்பு முன்னாள் சுகாதார அமைச்சருடன் இந்த விடயம் தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். இன்று (17) காலை எழுத்தின் மூலம் சமர்ப்பித்திருந்தேன்.” என தெரிவித்தார்.
இந்த நிலையில் குறுக்கிட்ட அமைச்சர் ”இது ஒழுங்குப்பிரச்சினை இல்லை, வேறு விடயமாக இதைப் பற்றிப் பேசலாம்”என தெரிவித்தார்.
இதேவளை “இது ஒழுங்குப் பிரச்சினையுடன் தொடர்புடையது அல்ல“ என சபாநாயகர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
https://www.youtube.com/embed/esSGbIKZ2xs