Home இலங்கை அரசியல் நாடாளுமன்றத்திற்கு சென்ற அர்ச்சுனாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்! அதிகாலையில் ஏற்பட்ட குழப்பம்

நாடாளுமன்றத்திற்கு சென்ற அர்ச்சுனாவை தடுத்து நிறுத்திய பொலிஸார்! அதிகாலையில் ஏற்பட்ட குழப்பம்

0

அனுராதபுரம் – ரம்பேவ பகுதியில் போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் குழுவுடன் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இன்று (21) காலை நாடாளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனது வாகனத்தில் விஐபி (VIP) விளக்குகளைப் பயன்படுத்தி ஏனைய வாகனங்களுக்கு இடையூறாக வாகனம் செலுத்தியதற்காக அர்ச்சுனாவின் வாகனத்தை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

காலை நாடாளுமன்றத்திற்கு சென்ற வேளை..

இதன் காரணமாக, கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரிகளுடன் நாடாளுமன்ற உறுப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதன்போது பொலிஸ் அதிகாரிகள் அவரது அடையாள அட்டை மற்றும் சாரதி அனுமதிப்பத்திரத்தை கோரியுள்ளனர்.

இந்நிலையில், ஆவணங்களை வழங்க மறுத்து, இடையூறு விளைவிக்கும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா நடந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version