Home இலங்கை அரசியல் திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

திருகோணமலை எரிபொருள் தாங்கிகள் தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு

0

இந்தியாவுடனான கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் திருகோணமலை எண்ணெய் தாங்கி
வளாகத்தின் அபிவிருத்தி தொடர்பாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பொதுமக்களை
தவறாக வழிநடத்துவதாக பிரவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) குற்றம்
சுமத்தியுள்ளார்.

செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய கம்மன்பில, கட்டுகுருந்த
கூட்டத்தில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல் தொடர்பில் தமது கருத்துக்களை
வெளியிட்டுள்ளார்.

இரண்டு தனியார் நிறுவனத்திற்கு குத்தகை

நேற்றைய கட்டுக்குருந்த கூட்டத்தின்போது, 99 தாங்கிகளில் 61 தாங்கிகள்
இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான கூட்டு முயற்சியின் கீழ்
உருவாக்கப்படும் என்றும், 24 தாங்கிகள் இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின்
கீழ் இருக்கும் என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.

எனினும் இதற்கு பதிலளித்துள்ள கம்மன்பில, ஜனாதிபதி இதை ஒரு புதிய முயற்சியாக
முன்வைத்ததாகவும், ஆனால் இந்த திட்டம் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு எரிசக்தி
அமைச்சராக இருந்த காலத்தில் இறுதி செய்யப்பட்டதாகவும் கம்மன்பில கூறியுள்ளார்.

தாம், 2020இல் கடமைகளை ஏற்றுக்கொண்டபோது, 99 தாங்கிகளும் 2002 முதல் இந்திய
கட்டுப்பாட்டில் இருந்தன.

இவற்றில், 14 மட்டுமே லங்கா ஐஓசியின் பயன்பாட்டில் இருந்தன, மேலும் இரண்டு
தனியார் நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்டிருந்தன.

மீதமுள்ள 83 தாங்கிகள் 75 ஆண்டுகளாக கைவிடப்பட்டிருந்தன.

நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர்..

எனினும் நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் அதில் 83 தாங்கிகளையும்
மீட்டெடுக்க முடிந்தது.

24 ஐ இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் செயல்பாடுகளுக்காக
வைத்துக்கொண்டு, மீதமுள்ளவற்றை டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல்ஸ் லிமிடெட்
என்ற புதிய நிறுவனத்தின் கீழ் கூட்டு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்டது.

இது தொடர்பான ஒப்பந்தம் 2022 ஜனவரி 6ஆம் திகதியன்று கையெழுத்தானது என்றும்
கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.

எனினும் ஜனாதிபதி இதனை புதிய முயற்சியாக குறிப்பிட்டுள்ளதாகவும் உதய கம்மன்பில
சுட்டிக்காட்டியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version