Home இலங்கை இலங்கைக்கு அமெரிக்காவில் கிடைக்கும் அரிய சலுகை

இலங்கைக்கு அமெரிக்காவில் கிடைக்கும் அரிய சலுகை

0

இலங்கை ஏற்றுமதிகளில் 70 முதல் 80 சதவீதம் வரையிலான பொருட்கள் வரிவிலக்குடன்
அமெரிக்க சந்தைக்கு அனுமதிக்கப்படலாம் என அமெரிக்கா ஒரு முக்கியமான வர்த்தக
சலுகையை முன்மொழிந்துள்ளது.

இந்த தகவலை, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த
பெர்னாண்டோ நேற்று(16) ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

வரி இல்லாத அணுகலுக்காக 

அமெரிக்காவுடன் குறிப்பிடத்தக்க வர்த்தக பற்றாக்குறை உள்ள நாடுகள் மீது பரஸ்பர
வரிகளை விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சமீபத்தில் முடிவு
செய்ததைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தக
பேச்சுவார்த்தைகளின் போது இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

வரி இல்லாத அணுகலுக்காக பரிசீலிக்கப்பட வேண்டிய 1,161 இலங்கை ஏற்றுமதி
பொருட்களின் பட்டியலை அமெரிக்கா முன்மொழிந்துள்ளதாகவும் இதில் ஆடைகள் மற்றும்
விவசாயத் துறை தொடர்பான 42 பொருட்கள் போன்ற முக்கிய ஏற்றுமதிகளும்
அடங்குகின்றன.

இருப்பினும், பேச்சுவார்த்தைகள் இன்னும் நடந்து கொண்டிருப்பதாலும், இராஜதந்திர
நெறிமுறைகளால் நிர்வகிக்கப்படுவதாலும், இந்த கட்டத்தில் திட்டத்தின் மேலதிக
தகவல்கள பகிரங்கமாக வெளியிட முடியாது எனவும் பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில்
ஜயந்த பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version