சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் கமல் தமிழ் சினிமாவில் போட்டியாளர்களாக தான் பார்க்கப்படுகிறார்கள்.
அவர்கள் 46 வருடங்களுக்கு முன்பு 1979ல் வந்த நினைத்தாலே இருக்கும் படத்தில் தான் இணைந்து நடித்து இருந்தனர். அதற்கு பிறகு ஒன்றாக நடிக்கவில்லை.
இணைகிறார்களா?
இந்நிலையில் ரஜினி மற்றும் கமல் இணைந்து நடிக்க போகிறார்கள் என ஒரு செய்தி பரபரப்பாக பரவி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் தான் அந்த படத்தை இயக்க போகிறார் என்றும், இதுவும் கேங்ஸ்டர் படமாக தான் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
லோகேஷ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் ரஜினியை வைத்து லோகேஷ் இயக்கிய கூலி படம் பாக்ஸ் ஆபிசில் சாதனை வசூல் செய்து வருகிறது. வெறும் 4 நாட்களில் இந்த படம் 400 கோடிக்கும் மேல் வசூலித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
