Home முக்கியச் செய்திகள் தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

தென்னிலங்கையில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி

0

புதிய இணைப்பு 

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் பலியானார்.

காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்தார்.

பேலியகொடை ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இருவரால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.

பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இலக்கு வைத்து குறித்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முதலாம் இணைப்பு 

பேலியகொடையில் (Peliyagoda) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பேலியகொடை – ஞானரதன மாவத்தைப் பகுதியில் இன்று (19) காலை இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அடையாளம் தெரியாத இரு நபர்களால் இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வைத்தியசாலையில் அனுமதி

பேலியகொடையில் மீன் வியாபாரத்தில் ஈடுபட்ட ஒருவர் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, அவரை இலக்கு வைத்து இந்தத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில் மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் ஒருமுகத் திருவிழா

https://www.youtube.com/embed/0ri5jWSqjJ4

NO COMMENTS

Exit mobile version