Home இலங்கை அரசியல் மட்டக்களப்பில் திட்டமிடப்படாத அபிவிருத்தி தொடர்பில் அரியநேத்திரன் விசனம்

மட்டக்களப்பில் திட்டமிடப்படாத அபிவிருத்தி தொடர்பில் அரியநேத்திரன் விசனம்

0

மட்டக்களப்பு மாவட்டத்தைப் பொறுத்தவரையில் திட்டமிடப்படாத வீதியபிவிருத்தி,
மற்றும் வடிகானமைப்புக்கள் இன்மை, போன்ற அபிவிருத்திகள் காரணமாகத்தான்
மாவட்டத்தின் கிராமப்புறங்களும், நகர்புறங்கள் உள்ளிட்ட பல இடங்கள்
வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கடந்த ஜனாதிபதித்
தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக போட்டியிட்டவருமான பாக்கியச்செல்வம்
அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப் பற்று பிரதேசத்தில் மக்கள் எதிர்கொண்ட
வெள்ள நிலமைகள் தொடர்பில் நேரில் பார்வையிடுவதற்காக நேற்று (29) அவர் அப்பகுதிக்கு சென்றிருந்தார்.

இதன்போது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

போக்குவரத்து மார்க்கங்கள்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், “மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பெருநிலத்தைப் பெறுத்தவரையில்
பட்டிருப்பு போரதீவு பிரதான வீதி, மண்முனை கொக்கட்டிச்சோலை பிரதான வீதி,
வவுனதீவு வலையிறவு பிரதான வீதி, மற்றும் அப்பிளாந்துறை குருக்கள்மடம்
படகுப்பாதை, மண்டூர் குருமண்வெளி படகுப்பாதை ஆகிய போக்குவரத்து மார்க்கங்கள்
அமைந்துள்ளன.

இப்போக்குவரத்து மார்க்கங்கள் ஊடகாக இப்போது நோய்காவு வண்டிகள்
மற்றும் மக்களும் பயணிக்க முடியாத சூழல் ஏற்பட்டிருக்கின்றன மக்கள் பொதுவாக
உழவு இயந்திரத்தில்தான் பயணித்து வருகின்றார்கள்.

அம்பிளாந்துறைக்கிராமத்திலே
வியாழக்கிழமை தய் ஒருவருக்கு திடீரென சுகயீனம் ஏற்பட்டு உழவு
இயந்திரத்திலேயேதான் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற
சம்பவமும் பதிவாகியது.

எனவே கடந்த காலங்களிலருந்த ஜனாதிபதிகளின் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில்
மேற்கொள்ளப்பட்ட, முறையான திட்டமிடல்கள் இல்லாதல், வடிகான்கள் இன்றி வீதிகள்
அமைத்தல், குளங்களை நிரப்பி வீடுகள் அமைத்தல், போன்ற அபிவிருத்திகளை செய்தமையே
வருடாந்தம் இவ்வாறு மாவட்டம் வெள்ள அனர்த்தத்திற்கு முகம் கொடுக்க
நேரிடுகின்றது.

இவற்றுக்கு மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒரிரு நாட்களுக்குப்
பெய்யும் மழையால் தொடற்சியாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுக்
கொண்டிருக்கின்றன.

மாற்றத்தைக் கொண்டு வருகின்றோம் என்றுதான் தற்போது தேசிய மக்கள் சக்தி
ஆட்சிக்கு வந்துள்ளது மாற்றம் என்பது ஊழலை ஒழிப்பது என அவர்கள்
தெரிவிக்கின்றார்கள் ஊழலை ஒழிப்பது மாத்திரம் மாற்றமல்ல, அபிவிருத்தி
எனும்போது இவ்வாறான மாற்றங்களையும் செய்து அதுதொடர்பிலும் மாற்றங்களை முதலில்
கொண்டவர வேண்டும்.

தேசிய மக்கள் சக்தி

தேசிய மக்கள் சக்தி கட்சி வடகிழக்கில் இருந்தும் பெருவாரியான வாக்குகளைப்
பெற்றிருக்கின்றார்கள் வடகிழக்கிலே 75 வருடகாலமாக இருக்கின்ற
இனப்பிரச்சனைக்கான தீர்வைக்கூட அவர்கள் இதுவரையில் பேசவில்லை.

ஜனாதிபதியின்
அக்கிராசன உரையை பலர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், ஆனால் அவர் அதைப்பற்றி
கதைக்கவில்லை. அவர் ஊழலைப்பற்றியும் வேறு விடையங்கள் பற்றியும் கதைத்துக்
கொண்டிருந்தாரே தவிர இனப்பிரச்சனை ஒன்று இருக்கின்றது அதற்குத் தீர்வு
வழங்கப்பட வேண்டும் என்று கூட தற்போதைய ஜனாதிபதி அவரது வாயால் கூறவில்லை.

இவ்விடையத்தையும் கருத்திற்கொண்டு இயற்கை அனர்த்தங்களுக்கு ஈடு கொடுக்கக்
கூடிய வடிகான் வசதிகளையும் அமைத்து இலகுவில் நீர் வடிந்தோடும் வழிவகையையும்,
ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய தேவை தற்போதைய அரசுக்கு உள்ளது.

அது மாத்திரமின்றி மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த காலங்களில் சட்டவிரோத மண்
அகழ்வுகள் இடம்பெற்றுள்ளன முன்பிருந்த இராஜாங்க அமைச்சர்கள்,
முதலமைச்சர்கள், மிகவும் மோசமான முறையில் மண் அகழ்வுகளுக்காக அவர்களது
உறவினர்களுக்கு அனுமதிப்பதிரங்களை வழங்கி மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு அதனை
தென் பகுதிக்கு அனுப்பியிருந்தார்கள்.

அதன் காரணமாகவும் வெள்ளம் மாவட்டத்தின்
பல இடங்களில் சூழ்ந்திருக்கின்றது. எனவே மண் அகழ்வுகளை திட்டமிட்ட வகையில்
மேற்கொள்ள வேண்டுமே தவிர அரசியல் இலாபம் தேடுவதற்காகவும், ஒருசிலர்
உழைப்பதற்காகவும் இவ்வாறான விடையங்களை செய்யக்கூடாது” என அவர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version