இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாணம் – கிளிநொச்சி மாவட்ட
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், இரணைமடுக் குளத்தின் தற்போதைய நிலை
தொடர்பாக நேரில் சென்று அவதானித்தார்.
குறித்த பகுதிக்கு அவர் நேற்றையதினம் (29.11.2024) விஜயம் செய்துள்ளார்.
இதன்போது, கிளிநொச்சி பிரதி நீர்ப்பாசனப் பணிப்பாளரான பொறியியலாளர் க.கருணாநிதி
மற்றும் கிளிநொச்சி கிழக்கு பிரிவுக்கான நீர்ப்பாசனப் பொறியியலாளர் பிரகாஷ் ஆகியோரையும் நாடாளுமன்ற உறுப்பினர் நேரில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
மக்களுக்கு எச்சரிக்கை
இரணைமடுக் குளத்தின் வான்கதவுகள் கடந்த 26ஆம் திகதி இரவு திறந்து விடப்பட்டிருந்தது.
மேலும், இதன்போது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.