Home சினிமா ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை அதனால் நிறுத்தி விட்டேன்.. ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஓபன் டாக்!

ரசிகர்களுக்கு அது பிடிக்கவில்லை அதனால் நிறுத்தி விட்டேன்.. ஆக்ஷன் கிங் அர்ஜுன் ஓபன் டாக்!

0

அர்ஜுன்

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டவர் நடிகர் அர்ஜுன். இவரை ஆக்ஷன் கிங் அர்ஜுன் என மக்கள் செல்லமாக அழைப்பார்கள்.

இவர் ஜெய்ஹிந்த், ஜென்டில்மேன், முதல்வன், ஏழுமலை, ரிதம் என பல சூப்பர்ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் லியோ, விடாமுயற்சி ஆகிய திரைப்படங்களில் வில்லனாகவும் நடித்து மிரட்டியுள்ளார்.

அஜித்தின் அட்டகாசம் திரைப்படம் ரீ ரிலீஸில் செய்துள்ள வசூல்.. இவ்வளவா?

ஓபன் டாக்! 

இந்நிலையில், பேட்டி ஒன்றில் அர்ஜுன் வில்லன் ரோல் குறித்து சில விஷயங்கள் பகிர்ந்துள்ளார்.

அதில், ” இப்போது நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதை நிறுத்தி விட்டேன். விடாமுயற்சி படம் தான் நான் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்த கடைசி திரைப்படம்.

என் ரசிகர்களுக்கு நான் அப்படி வில்லன் ரோலில் நடிப்பது பிடிக்கவில்லை, அதனால் நான் இனி அப்படி நடிக்கமாட்டேன். வில்லன் ரோலுக்கு விருது கூட பெற்றேன் ஆனால், என் ரசிகர்கள் சொன்னதால் வில்லன் ரோலில் நடிக்கமாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.  

NO COMMENTS

Exit mobile version