Home இலங்கை அரசியல் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அதிரடியாக கைது

மட்டக்களப்பு மாவட்ட அரசியல் பிரமுகர் அதிரடியாக கைது

0

மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரமுகர் அருண் தம்பிமுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கையானது கொழும்பிலிருந்து (Colombo) சென்ற நிதி மோசடி விசாரணைப் பிரிவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அருண் தம்பிமுத்து பாசிக்குடாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி

வெளிநாட்டில் உள்ள தனிநபர் ஒருவரிடம் இருந்து இருந்து கோடிக்கணக்கான நிதியை பெற்று மோசடி செய்தார் என்ற சந்தேகத்தின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல்துறை தகவல்கள் தெரிவித்தன.

இதேவேளை, வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட இருவருக்கு கொழும்பு உயர் நீதிமன்றத்தால் 16 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சரான எஸ்.எம்.ரஞ்சித் (S.M. Ranjith) மற்றும் அவரது பிரத்தியேக செயலாளரான சாந்தி சந்திரசேன (Shanthi Chandrasena) ஆகியோருக்கே இவ்வாறு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

வடமத்திய மாகாண முதலமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் சட்டவிரோதமாக எரிபொருள் கொடுப்பனவாக 2,080,500 ரூபாவை பெற்றுக் கொண்டதன் ஊடாக ஊழல் இடம்பெற்றுள்ளதாக பிரதிவாதிகள் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  

https://www.youtube.com/embed/64bECvN3KGQ

NO COMMENTS

Exit mobile version