Home உலகம் செங்கடலில் கேபிள் சேதம்: ஆசியாவில் இணைய சேவை பாதிப்பு

செங்கடலில் கேபிள் சேதம்: ஆசியாவில் இணைய சேவை பாதிப்பு

0

செங்கடலுக்கு அடியில் கேபிள்கள் சேதம் அடைந்துள்ளமையினால் இணைய சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல்காடெல் – லுசென்ட் நிறுவனம் சார்பில் செங்கடல் அடியில் இணையதள சேவைகள் செல்கின்றன.

இந்த கேபிள்கள் சேதமடை ந்துள்ள நிலையில், ஆசிய நாடுகளில் இணையதள சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஆசிய நாடுகள்

இது குறித்து இணையதள சேவையை நிர்வகித்து வரும், நெட்பிளாக்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.

குறித்த அறிவிப்பில், “செங்கடல் பகுதியில் கடலுக்கடியில் புதைக்கப்பட்டிருந்த இணையதள கேபிள்கள் சேதமடைந்ததால், ஆசியா மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் இணைய சேவை பாதிக்கப்பட்டது.

இணையதள சேவை

இது ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையதள சேவை தடை குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடலுக்கடியில் கேபிள்களில் ஏற்பட்ட சேதத்தை சரிசெய்ய சில நாட்கள் தேவைப்படும்” என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version