Home முக்கியச் செய்திகள் கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முடக்கும் அரசு

கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியான சொத்துக்களை முடக்கும் அரசு

0

சுமார் 500 கோடி ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் தற்காலிக அடிப்படையில் முடக்கப்பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

திட்டமிட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடைய பாதாள உலகக்குழு உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் சொத்துக்களே அதிகளவில் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால (Ananda Wijepala) தெரிவித்துள்ளார்.

சொத்துக்களை முடக்கும் சட்டம்

முடக்கப்பட்ட சொத்துக்களில் சில அரசியல்வாதிகளின் சொத்துக்களும் அடங்குவதாகவும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அண்மையில் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட குற்றச் செயல்களின் ஊடாக ஈட்டப்பட்ட சொத்துக்களை முடக்கும் சட்டத்தின் அடிப்படையில், இந்த சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால குறிப்பிட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version