ஜ.நா.மனித உரிமை
உயர்ஸ்தானிகர் றோமன் சட்டத்தில் இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்கின்ற ஒரு
சிபாரிசை வலியுறுத்தி இருப்பது மிகவும் முக்கியமான விடயமாக கருதுவதாக தமிழரசு கட்சியின் பிரதி பொதுச்
செயலாளர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை -ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்று (14) இடம்பெற்ற பின் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையின் உடைய ஆணைக்குழு ஜ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் றோமன் சட்டத்தில்
இலங்கை கைச்சாத்திட வேண்டும் என்கிற ஒரு சிபாரிசை முன்வைத்துள்ளனர்.
தமிழரசுக் கட்சி
இது மிக
மிக முக்கியமான விடயம்.நீண்ட காலமாக இந்த விடயத்தை தமிழரசுக் கட்சி
வலியுறுத்தி வந்துள்ளோம்.
முதல் தடவையாக நாட்டில் உள்ள மனித உரிமை ஆணைக்குழு ஜ.நா.மனித உரிமை
உயர்ஸ்தானிகர் இதை வலியுறுத்தி செல்லி இருப்பது மிகவும் முக்கியமான விடயமாக
கருதுகின்றோம்.
இலங்கை அரசாங்கத்துக்கு உறுப்பு நாடுகள் இது சம்பந்தமாக
தொடர்ச்சியாக அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பது எங்கள் நிலைப்பாடு எனத் தெரிவித்துள்ளார்.
