Home இலங்கை பொருளாதாரம் அடுத்த வருடத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

அடுத்த வருடத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு

0

திருத்தம் செய்யப்பட்ட அஸ்வெசும நலன்புரி நன்மைகள் கொடுப்பனவு தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இதன்படி 2002 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க நன்புரி சட்டத்துக்கு அமைவாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு(Anura Kumara Dissanayake) வழங்கப்பட்ட விசேட அதிகாரங்களுக்கு அமைவாக இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

வறிய சமூகப் பிரிவினருக்கு தற்போது வழங்கப்படுகின்ற மாதாந்த நலன்புரிக் கொடுப்பனவுத் தொகையை 8,500 ரூபாவில் இருந்து 10,000 ரூபா வரை அதிரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வறிய சமூகப் பிரிவு

மேலும், வறிய சமூகப் பிரிவினருக்கு கீழுள்ள தரப்புக்கு வழங்கப்பட்ட 15,000 ரூபாவை 17,500 ரூபாவாக அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

அத்தோடு, நலன்புரிப் பலன்களைப் பெறும் மாற்றுத்திறனாளிகள், பாதிக்கப்படக்கூடிய மற்றும் மிகவும் ஏழ்மையான குடும்பங்களுக்கான சமூகப் பிரிவுகளில், 480,000 குடும்பங்களுக்கு மாதாந்த நல உதவித்தொகை 5,000 மற்றும் 17,000 ரூபா வழங்கப்படும்.

தொடர்ந்து, 960,000 வறிய குடும்பங்களுக்கு 10,000 ரூபா நலன்பரி கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளன.

இது இடைநிலை மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான இழப்பீடு காலத்தை 31.03.2025 வரை நீட்டித்துள்ளது என வர்த்தமானியில் கூறப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2024 மே மாதம் 17ஆம் திகதி வெளியிடப்பட்டஅஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு முறைமை இரத்துச் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், ஏற்கனவே பலன்களை பெற்று, பல்வேறு காரணங்களால் பணம் செலுத்துவதில் தாமதம் ஏற்படும் பயனாளிகளுக்கும், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்து தற்போது பரிசீலனைக்கு உள்ளான விண்ணப்பதாரர்களுக்கும், அவர்களின் தகைமையின் அடிப்படையில் இம்மாதம் 31ஆம் திகதி வரையில் கொடுப்பனவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

NO COMMENTS

Exit mobile version