Home சினிமா பராசக்தி படத்தின் அப்டேட், முரளி ஏ.ஐ மூலம்.. நடிகர் அதர்வா பகிர்ந்த ரகசியம்

பராசக்தி படத்தின் அப்டேட், முரளி ஏ.ஐ மூலம்.. நடிகர் அதர்வா பகிர்ந்த ரகசியம்

0

அதர்வா

பாணா காத்தாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அதர்வா. இவர் 80ஸ்- 90ஸ் காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த மறைந்த நடிகர் முரளியின் மூத்த மகன் ஆவார்.

பாணா காத்தாடி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதால் அப்படத்தை தொடர்ந்து பல படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.

தற்போது, சுதா கொங்கரா இயக்கி வரும் பராசக்தி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
சில தினங்களுக்கு முன் அதர்வா நடிப்பில் DNA படம் வெளியானது.

திருமணத்திற்கு பின்பும் நடிகை கீர்த்தி சுரேஷ் எப்படி உள்ளார் பாருங்க.. யோகாசன ஸ்டில்ஸ்

 அப்டேட்

இந்நிலையில், அதர்வா சில முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில், ” இன்னும் 2 மாதங்களில் பராசக்தி படப்பிடிப்பு முடிந்துவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், விஜயகாந்தைபோல முரளியையும் ஏ.ஐ மூலம் படங்களில் கொண்டு வர வாய்ப்பிருக்கிறதா? என்று அவரிடம் கேள்வி எழுப்ப அதற்கு, “ஸ்கிரிப்ட்தான் வேண்டும்.

இப்போது அது போன்ற எந்த திட்டமும் இல்லை. ஆனால், எதிர்காலத்தில் வருமா?, வராதா? என எனக்கு தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.      

NO COMMENTS

Exit mobile version