Home இலங்கை பொருளாதாரம் ஈரானின் திடீர் முடிவால் இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

ஈரானின் திடீர் முடிவால் இலங்கைக்கு ஏற்படவுள்ள ஆபத்து

0

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே முறுகல் நிலை அதிகரித்து வருவதால், ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த செயற்பாடு இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை நேரடியாகப் பாதிக்கும் என்று அரசியல் ஆய்வாளர் மோகன் சமரநாயக்க தெரிவித்துள்ளார்.

ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால், வளைகுடா பகுதியிலிருந்து உலகெங்கிலும் உள்ள பல நாடுகளுக்கு எரிபொருள் விநியோகம் நிறுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

ஹார்முஸ் நீரிணை

ஹார்முஸ் நீரிணை ஊடாக உலகின் 25 சதவீதமான நாடுகளுக்கு எரிபொருள் போக்குவரத்து நடைபெறுகிறது.

ஈரானினால் அதனை மூடிவிட முடியும். அவ்வாறு மூடினால் பாரிய எரிபொருள் விலை அதிகரிப்பையும் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ள நேரிடும்.


எரிபொருள் உற்பத்தி

அமெரிக்கா விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக, வளைகுடா பிராந்தியத்தை தவிர, உலகின் பிற எரிபொருள் உற்பத்தி செய்யும் நாடுகளிலிருந்து இலங்கை எரிபொருளை வாங்குவதும் கடினமாகும்.

  

இலங்கை எரிபொருளுக்கு வெளிநாடுகளை நம்பியுள்ள ஒரு நாடாகும். இதனால் ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டால் இலங்கை கடுமையாக பாதிக்கப்படும்.

இலங்கை, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எரிபொருள் பெற முயற்சித்தாலும் ஹார்முஸ் நீரிணை என்பது கட்டாயமாகும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version