Home இலங்கை குற்றம் இந்திய – நாகை கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல் : மூவர் வைத்தியசாலையில் அனுமதி

இந்திய – நாகை கடற்தொழிலாளர்கள் மீது தாக்குதல் : மூவர் வைத்தியசாலையில் அனுமதி

0

இந்தியாவின் (India) நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் இருந்து அக்கரை பேட்டையை
சேர்ந்த கடற்றொழிலாளர்கள் மூவர் தமக்கு  சொந்தமான பைபர் படகில் நேற்று (20) மதியம் கடற்றொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது கோடியக்கரைக்கு தென்கிழக்கே 3
கடறறொழிலாளர்களும் இன்று (21) அதிகாலை கடற்றொழிலில் ஈடுபட்டவேளை, அங்கு 2 படகில் வந்த 6 கடற்கொள்ளையர்கள் இவர்களை தாக்கி விட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், படகை வழி
மறித்து கடற்றொழிலாளர்களை கத்தி மற்றும் கட்டையால் தாக்கி விட்டு படகில் இருந்த
மீன்கள், கடற்றொழில் வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை பறித்துக் கொண்டு
தப்பிச் சென்றுள்ளனர்.

கிராமங்கள் இடையே பெரும் அச்சம்

தாக்குதலில் இருந்து தப்பிய மூன்று கடற்றொழிலாளர்களும் உடனடியாக கோடியக்கரை கடற்கரைக்கு வந்து சேர்ந்ததுடன்,  அங்கிருந்து சக கடற்றொழிலாளர்களை மீட்டு
வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சேர்த்துள்ளனர்.

இந்நிலையில்,  தாக்குதல் சம்பவம் கடற்றொழிலாளர் கிராமங்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி
உள்ளது.

இந்த சம்பவம் குறித்து வேதாரண்யம் கடலோர காவல் குழும பொலிஸார் வழக்குப்பதிவு
செய்து விசாரித்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version