ரஷ்யாவின் (Russia) மேற்கு பிரையன்ஸ்க் (Bryansk) பிராந்தியத்தில் உக்ரைன் (Ukraine) படைகள் ஊடுருவ மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் முறியடிக்கப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது.
பிரையன்ஸ்க் பிராந்தியத்தின் கிளிமொவ் (Klimov) மாவட்டத்தில் உக்ரைன் படைகள் ஊடுருவ முயன்றுள்ள நிலையில், ரஷ்ய வீரர்கள் தக்க பதிலடி அளித்து அதனை முறியடித்தாக அப்பகுதி ஆளுநர் அலெக்சாண்டர் போகோமாஸ் தெரிவித்துள்ளார்.
குர்ஸ்க் ஊடுருவல்
இந்த நிலையில், ஏற்கனவே ரஷ்யாவின் மேற்கு குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் ஊடுருவி பல கிராமங்களை கைப்பற்றியதுடன், மூன்று பிரதான பாலங்களையும் தகர்த்தது.
கடந்த 2022 பெப்ரவரி இறுதியில் உக்ரைன் மீதான போர் தொடங்கியதன் பின்னர் முதல் முறையாக புதன்கிழமை மிக மோசமான ட்ரோன் தாக்குதலை ரஷ்யா எதிர்கொண்டது.
ரஷ்ய தலைநகர்
குறித்த தாக்குதலானது, ரஷ்ய தலைநகர் மீது இலக்கு வைக்கப்பட்டிருந்த நிலையில் முறியடிக்கப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில், ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரைன் படைகள் தொடர்ந்து முன்னேறி வருகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.