முன்னாள் ஜனாதிபதிகளின் தனிப்பட்ட பணியாளர்கள் பயன்படுத்திய சொகுசு வாகனங்கள் ஏல விற்பனையின் இரண்டாம் கட்டத்துக்கான விலைமனுக்கள் கோரப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதிகளின் ஆலோசகர்கள், பணிப்பாளர்கள், ஒருங்கிணைப்புச் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருந்த சொகுசு வாகனங்களே இவ்வாறு ஏலத்தில் விற்பனை செய்யப்படவுள்ளது.
வாகனங்கள் விற்பனை
முன்னதாக இந்த ஏல விற்பனையின் முதலாம் கட்டத்தில் 15 டிபெண்டர்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன.
இம்முறை இரண்டாம் கட்ட ஏல விற்பனையில் பீ.எம்.டப்., போர்ட், ஹுண்டாய், லேண்ட் ரோவர், மொண்டரோ, லேண்ட் குரூசர் உள்ளிட்ட 27 சொகுசு வாகனங்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.
எதிர்வரும் 14ம் திகதி குறித்த வாகனங்களை ஜாவத்தையில் உள்ள சலுசல வளாகத்தில் காட்சிக்கு வைக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
