Home இலங்கை பொருளாதாரம் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கவுள்ள மின்சார சபை – அதிகரிக்கப்படவுள்ள கட்டணம்

நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி கொடுக்கவுள்ள மின்சார சபை – அதிகரிக்கப்படவுள்ள கட்டணம்

0

சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைக்கு அமைய மின்சார கட்டணங்களை அதிகரிக்க இலங்கை மின்சார சபை திட்டமிட்டுள்ளது.

இது தொடர்பான கோரிக்கையை அடுத்த வாரம் பொதுப் பயன்பாட்டு ஆணையத்திற்கு, இலங்கை மின்சார சபை அனுப்பவுள்ளது.

முன்வைக்கப்படும் கோரிக்கைக்கு அமைய மின்சார கட்டணத்தை 33 சதவீதம் அல்லது அதற்கு மேல் அதிகரிக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


மின்சார உற்பத்தி

சர்வதேச நாணய நிதியத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் அடுத்த தவணையை விடுவிக்க, மின்சார உற்பத்தி செலவை உள்ளடக்கிய கட்டணம் நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் பரிந்துரைத்துள்ளது.

அதனை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, 344 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் தவணையை, இலங்கை அரசாங்கம் பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version