Home இலங்கை கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடன் ஒத்துழைக்கும் அவுஸ்திரேலியா

கடல்சார் பாதுகாப்பில் இலங்கையுடன் ஒத்துழைக்கும் அவுஸ்திரேலியா

0

Courtesy: Sivaa Mayuri

கடல்சார் பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இலங்கைக்கு ஆதரவளிப்பதாக அவுஸ்திரேலிய அரசு மீண்டும் உறுதியளித்துள்ளது.

இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீபன்ஸ் (Paul Stephens), ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுடன் நேற்று (02) கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்தில் மரியாதைக்குரிய சந்திப்பொன்றை நடத்தினார்.

இலங்கையுடனான உறவுகள்

இந்த கலந்துரையாடலின் போது, இலங்கையுடனான உறவுகளை ஆழப்படுத்துவதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் வலுவான அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி திஸாநாயக்கவிற்கும் அவுஸ்திரேலியா அரசாங்கத்திற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கடல்சார் பாதுகாப்பு, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு முயற்சிகள் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அவுஸ்திரேலிய அரசாங்கம், இந்த சந்திப்பின்போது தனது ஆதரவை உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.  

NO COMMENTS

Exit mobile version