Home சினிமா Avatar: Fire and Ash திரை விமர்சனம்

Avatar: Fire and Ash திரை விமர்சனம்

0

அவதார் சீரிஸ் என்றாலே உலகம் முழுவதும் ஒரு பிரமாண்ட எதிர்பார்ப்பு இருக்கும், முதல் பாகம் அளவிற்கு இரண்டாம் பாகம் இல்லை என்றாலும் வசூலில் எந்த குறையும் வைக்க வில்லை, தற்போது நெருப்பு நிலத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ள இந்த அவதார்: பையர் அண்ட் ஆஷ் எப்படியுள்ளது பார்ப்போம்.

கதைக்களம்

அவதார் 2- விட்ட இடத்திலிருந்து படம் தொடங்குகிறது, ஜாக்சலி தன் குடும்பத்தை காப்பாற்ற, நாவி பகுதிக்குள் தங்குகிறார். அங்கு ஜாக்சலி இளைய மகன் தன் அண்ணனை இழந்த சோகத்தில் இருக்க, ஸ்பைடர் மனிதன் அவனால் இந்த உலகில் வாழ முடியாது அவனை மனிதர்கள் வாழும் பகுதியில் விட வேண்டும் என ஜாக்சாலி குடும்பத்துடன் வான்வெளி பயனத்தில் பறக்கிறார்.

அப்படி பறக்கும் போது சாம்பல் பகுதியை சார்ந்த நெருப்பை வைத்து ஆட்சி செய்யும் ஒரு கூட்டம் இவர்களை தாக்குகிறது, அங்கு மிகப்பெரிய போராட்டத்தின் பிறகு ஜாக்சலி மீண்டும் தன் குடும்பத்துடன் இணைகிறார்.

ஆனால், ஸ்பைடர் மூச்சு விட முடியாமல் திணற, அந்த நேரத்தில் கிரி ஏவாவை வணங்கி வேர்கள் மூலம் ஸ்பைடரை இந்த உலகிலேயே சுவாசிக்க வைக்கிறார்.

இந்த உண்மையை அறிந்த கேனல் மைல்ஸ், சாம்பல் பகுதி ராணியின் உதவியுடன், ஸ்பைடரை கைப்பற்றுகிறார், ஸ்பைடரை ஆராய்ச்சி செய்தால் சாதரணம் மனிதர்களும் இங்கு வந்து வாழ தொடங்கிவிடுவார்கள்.

இது நடக்க கூடாது என ஜாக்சாலி பெரும் படையுடன் அவர்களை எதிர்த்து வெற்றி கண்டாரா, என்பதே மீதிக்கதை.

ஜாக்கி ஜான் சம்பவம் The Shadow’s Edge திரை விமர்சனம்

படத்தை பற்றிய அலசல்

ஜேம்ஸ் கேமரூன் அவதாருக்காக தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை செலவிட்டு வருகிறார், ஆனால், படத்திற்கு படம் டெக்னாலஜி அதிகமாகி கண்களுக்கு விருந்து வைக்கிறார் தவிற கதையில் எந்த விருந்தும் இல்லை.

யாராவது ஒருத்தர் இவர்களை எதிர்க்கிறார்கள், ஜாக்சாலி பெரும் படையுடன் அவர்களை எதிர்த்து வெற்றிக்கொள்வவை பார்த்து பார்த்து கொஞ்சம் சலிப்பு வந்துவிட்டது, கொஞ்சம் முழித்துக்கொள்ளுங்கள் கேமரூன் சார்.

படத்தின் பெரும் பலமே விஷ்வல் காட்சிகள் தான், பேரஷுட் போல் வானத்தில் பறக்கும் மீன்கள், அங்கு வருக் சாம்பல் குழுவினர் சண்டை என ஆரம்பம் செம அதிரடியாக ஆரம்பிக்க, போக போக அட ஏதாச்சு பண்ணுங்கப்ப, ஓடிகிட்டே இருக்கீங்க என்று கேட்க தோன்றுகின்றது.

கிரி தான் என்று உணர தொடங்கி அவர் கதையை கேட்கும் இடம், தன் சக்தியை வைத்து சாம்பல் பகுதி மனிதர்களிடமிருந்து தப்பிக்கும் காட்சி அவருக்கான முக்கியத்துவம் இந்த படத்தில் சிறப்பு.

அதே நேரத்தில் இந்த பாகத்தின் பலமாக சாம்பல் பகுதி ராணி, வில்லத்தனம் மிரட்டுகிறது கேனல் மைல்ஸ் ஒருவரே போதும், அப்படியிருக்க இவரும் கூட சேர்வது கூடுதல் சிறப்பு.

படத்தின் முதல் பாதி மிக்வும் பொறுமையை சோதிக்கிறது, அட எப்ப தான்பா சண்டை போடுவீங்க என்ற நேரத்தில் பைகானை(திமிங்கலம்) தேடி செல்லும் ஜாக்சலி மகன், அதே நேரத்தில் ஜாக்சாலி நாவி மக்களை கேனல், சாம்பல் ராணி பிடிக்க வரும் இடத்தில் லிருந்து படம் சூடு பிடிக்கிறது.

அதிலிருந்து கிளைமேக்ஸ் பிரமாண்ட சண்டைக்காட்சி என முதல் 2 பாகத்தில் பார்த்தது போலவே சென்றாலும் பிரமாண்டம் பொழுதை போக்குகிறது.
 

க்ளாப்ஸ்

டெக்னிக்கல் ஒர்க்

வலுவான வில்லன்

கிளைமேக்ஸ் சண்டக்காட்சி

பல்ப்ஸ்

பொறுமையை சோதிக்கும் முதல் ஒன்றரை மணி நேரம்.

இன்னும் எத்தனை பாகத்தில் இதையே பார்ப்பது.

மொத்தத்தில் இதோடு அவதார்-யை மூட்டை கட்டுவது நமக்கும் நல்லது, ஜேம்ஸ் கேமரூனுக்கும் நல்லது.

NO COMMENTS

Exit mobile version