மொரகஹகந்த நீர்த்தேக்கத்தின் வான்கதவு இன்று இரவு திறக்கப்படவுள்ளதால் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அம்பன் ஆற்றின் கரையோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு 9.45 மணிக்கு 3ஆவது வான்கதவு 0.5 மீற்றர் அளவுக்கு திறந்துவிடப்படுவதுடன், வினாடிக்கு சுமார் 1,500 கன அடி வீதம் நீர் படிப்படியாக வெளியேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களுக்கு எச்சரிக்கை
இதனால் குறித்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு மொரகஹகந்த திட்டத்துக்கு பொறுப்பான பொறியியலாளர் பி.எஸ்.பண்டார கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உள்ளூர் அதிகாரிகள் நீர் மட்டங்களை கண்காணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
