இந்தியன் 2
இயக்குனர் ஷங்கர், கோலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் என்று ரசிகர்களால் அழைக்கப்படுகிறார். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளிவந்த இந்தியன் 2 படத்திற்கு ரசிகர்கள் கலவையான விமர்சனமே கொடுத்து வருகின்றனர், இருப்பினும் வசூலை குவித்து வருகிறது.
இப்போது சில ட்ரோல்களை சந்தித்தாலும் ஒரு காலத்தில் ஷங்கர், இந்திய சினிமாவின் ட்ரெண்ட் செட்டராக இருந்ததில் மாற்று கருத்தே இல்லை. அவர் இயக்கத்தில் கடந்த 2009 -ம் ஆண்டு வெளிவந்த எந்திரன் திரைப்படம் மாபெரும் வசூல் சாதனையை படைத்தது. அப்போது இருந்த தொழிநுட்பங்களை வைத்தே பிரமிக்கவைக்கும் ஒரு படைப்பை கொடுத்துவிட்டார்.
பேட்டி
இந்நிலையில் பிரபல ஹாலிவுட் ஜோசப் ருஸ்ஸோ ஒரு பேட்டியில் எந்திரன் படம் குறித்து பேசியுள்ளார். அதில் அவர், “ஏஜ் ஆஃப் அல்ட்ரான்” படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் பல அல்ட்ரான்கள் ஒன்றாக இணைந்து ஒரு பெரிய அல்ட்ரானாக மாறும், அதை எதிர்த்து அவெஞ்சர்கள் சண்டை போடுவார்கள். ஆனால், இந்த காட்சி படத்தின் நீளத்தை கருத்தில் கொண்டு கட் செய்தோம்..அந்த காட்சியை ரோபோ படத்தை பார்த்தே உருவாக்கினோம்” என்று ஜோசப் ருஸ்ஸோ தெரிவித்துள்ளார்.