Home முக்கியச் செய்திகள் கட்டுநாயக்காவுக்கு இந்தியாவிலிருந்து வந்த அவசர செய்தி : கொழும்பை அதிர வைத்த துப்பாக்கி சூடு

கட்டுநாயக்காவுக்கு இந்தியாவிலிருந்து வந்த அவசர செய்தி : கொழும்பை அதிர வைத்த துப்பாக்கி சூடு

0

காலப்போக்கில் இலங்கை கொலை களமாக மாறினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்ற சூழல்தான் தற்போது உருவாகியுள்ளது.

காரணம், நாளுக்கு நாள் நாட்டில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து கொண்டிருப்பதுடன் மக்கள் மத்தியில் பாதுகாப்பு குறித்த பலத்த கேள்வியும் உருவாகியுள்ளது.

நாட்டில் ஊழல் குறித்து நடவடிக்கை குறித்து கவலைப்படும் அரசு, தனி மனித பாதுகாப்பு குறித்து பெரிதாக கவனம் எடுக்கவில்லையா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதன் தொடச்சியாக கட்டுநாயக்க பகுதியில் இன்று (06) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் காயமடைந்திருந்தார்.

கட்டுநாயக்க 13 ஆம் தூண் பகுதியில் குறித்த துப்பாக்கி சூடு இடம்பெற்றிருந்த நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக தெரிவித்திருந்தனர்.

கட்டுநாயக்கவில் இந்த துப்பாக்கி சூடு என்பது பாரிய அதிர்வலையை கிளப்பி உள்ளது காரணம், சென்னையில் இருந்து வந்த சிறிங்கன் எயார்லைன்ஸ் விமானம் கடந்த மூன்றாம் திகதி பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சிறப்பு பாதுகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டது.

காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடைய சந்தேக நபர்கள் விமானத்தில் இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இந்தியாவிலிருந்து எச்சரிக்கை வந்ததாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் உறுதிப்படுத்திய நிலையில், இலங்கை பாதுகாப்புப் படையினர் விமானம் தரையிறங்கியவுடன் சோதனை நடத்தி இருந்தனர்.

இதையடுத்து, அங்கு பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இவ்வாறு துப்பாக்கி சூடு இடம்பெற்றிருப்பது பாதுகாப்பு குறித்த பலத்த கேள்வியை உருவாக்கியுள்ளது.

இந்தநிலையில், இடம்பெற்ற துப்பாக்கி சூட்டின் பிண்ணனி, அரசின் அடுத்தக்கட்ட நடவடிக்கை மற்றும் பலதரப்பட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி,

https://www.youtube.com/embed/80FQNRolYoI

NO COMMENTS

Exit mobile version