தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருப்பவர் ரவி மோகன். இவரை சுற்றி தற்போது பல சர்ச்சைகள் ஓடிக்கொண்டு இருக்கிறது. அது ஒரு பக்கம் இருக்கட்டும், இவர் நடிப்பில் 2005ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தாஸ்.
ரேணுகா மேனன்
ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு வெளிவந்த இப்படம் தோல்வியை சந்தித்தது. பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் உருவான இப்படத்தில் ரவி மோகனுக்கு ஜோடியாக நடிகை ரேணுகா மேனன் நடித்திருந்தார்.
இவர் மலையாளத்தில் 2002ல் வெளிவந்த நம்மல் என்கிற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். பின் தொடர்ந்து மலையாளத்தில் நடித்து வந்த ரேணுகா மேனன், பிப்ரவரி 14 படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
நடிகர் விஷால் உடல் இப்படி ஆக குடிபோதை தான் காரணமா.. அவரே சொன்ன பதில்
இப்போது எப்படி இருக்கிறார்
அதன்பின் ரவி மோகனுடன் இணைந்து தாஸ், ஆர்யாவுடன் இணைந்து கலபகாதலன் ஆகிய படங்களில் நடித்தார். 2006ல் இவருக்கு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் சினிமாவிலிருந்து விலகிவிட்டார்.
இந்த நிலையில், நடிகை ரேணுகா மேனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இதோ அவரின் புகைப்படம்..
