Home இலங்கை சமூகம் தொழிற்சாலையொன்றில் வெடித்து சிதறிய கொதிகலன்: ஒருவர் பலி! பலர் காயம்

தொழிற்சாலையொன்றில் வெடித்து சிதறிய கொதிகலன்: ஒருவர் பலி! பலர் காயம்

0

திவுலப்பிட்டிய – படல்கமவில் உள்ள தொழிற்சாலையொன்றில் கொதிகலன் வெடித்ததில் 18 தொழிலாளர்கள் காயமடைந்துள்ளதுடன் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்துச் சம்பவம் இன்று(14.10.2024) காலை ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரியுல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடையவர் நபரே காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இன்று (14) காலை உயிரிழந்துள்ளார்.

வெடி விபத்து தொடர்பான விசாரணை

இந்நிலையில், சடலம் நீர்கொழும்பு மாவட்ட பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

அத்துடன், காயமடைந்தவர்கள் நீர்கொழும்பு, திவுலப்பிட்டிய மற்றும் அகரகம வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொதிகலன் இயங்கிக்கொண்டிருந்த வேளையில் அதற்குள் ஏற்பட்ட அதிக அழுத்தம் காரணமாக வெடிப்பு ஏற்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை படல்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/badalgama-factory-boiler-explosion-one-died-1728903179

NO COMMENTS

Exit mobile version