Home இலங்கை அரசியல் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள வாக்குச் சீட்டு சரிபார்க்கும் பணிகள்

இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ள வாக்குச் சீட்டு சரிபார்க்கும் பணிகள்

0

சிறிலங்கா ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குச் சீட்டுகளை அச்சிடுவதற்கு முன்னரான சரிபார்ப்பு நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்வரும் செப்டெம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் உத்தியோகபூர்வ வாக்குச்சீட்டை அச்சிடுவதற்கான உத்தரவு அடுத்த சில தினங்களில் அரச அச்சகத்துக்கு (Department of Government Printing) வழங்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கொழும்பில் (Colombo) நேற்று (17)  நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayake), தேர்தலுக்காக மதிப்பிடப்பட்ட ஒதுக்கீடு போதுமானதாக இருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.

வாக்குச்சீட்டுக்கான செலவு

கடந்த முறையை விட தற்போது வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளாதகவும் அதற்கமைய வாக்குச்சீட்டின் நீளம் 27 அங்குலம் வரை அதிகரித்துள்ளதுடன் ஒரே பக்கத்தில் வாக்குச்சீட்டை அச்சிட முடியும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

வாக்குச்சீட்டுக்கான செலவு மதிப்பிடப்பட்ட செலவினத்தை விடவும் அதிகரிக்கும் எனவும் எனினும் மதிப்பிடப்பட்ட ஒதுக்கீட்டிற்குள் குறித்த அச்சிடல் பணிகளை முன்னெடுக்க முடியும் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version