Home இலங்கை அரசியல் தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கும் பொது வேட்பாளர் தேர்தல் பிரசாரம்

தமிழர் தாயகத்தில் ஆரம்பிக்கும் பொது வேட்பாளர் தேர்தல் பிரசாரம்

0

2024 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளராக களமிறங்கியிருக்கும் பா. அரியநேத்திரனின் (
P.Ariyanethiran) தேர்தல் பிரசாரம்  பொலிகண்டி (Polikandy) தொடக்கம் பொத்துவில் (Pottuvil) வரை தமிழர் தாயகப் பிரதேசங்கள் முழுவதும் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வு யாழ்ப்பாணத்தில் (Jaffna) அமைந்துள்ள தந்தை செல்வாவின் நினைவுத்தூபியில் இன்று (18.08.2024) காலை 9 மணியளவில் மலர்வணக்கம் செலுத்துவதுடன் ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து, நடைபெறவுள்ள ஆலய, தேவாலய வழிபாடுகளையடுத்து பிற்பகல் முள்ளிவாய்க்காலில் (Mullivaikkal) மலர்வணக்கம் செலுத்தப்படவுள்ளது.

மலர்வணக்கம்

இதன் பின்னர், முல்லைத்தீவு (Mullaitivu) வற்றாப்பளை செந்தமிழ் விளையாட்டு மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு பொதுவேட்பாளர் அறிமுக பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

அதனையடுத்து, வடக்கு – கிழக்கில் உள்ள எட்டு மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுகளிலும் இரண்டு கூட்டங்களும் மாவட்டங்களிற்கு ஒரு பெரும் பொதுக்கூட்டமும் பொதுவேட்பாளர் கலந்து கொள்ளும் கூட்டமாக இடம்பெற திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒகஸ்ட் 19ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்திலும், 26 முதல் 29 வரை கிளிநொச்சியிலும் (Kilinochchi), ஒகஸ்ட் 30 முதல் செப்டெம்பர் 03 வரை முல்லைத்தீவிலும், செப்ரெம்பர் 04 முதல் 06 வரை மன்னாரிலும் (Mannar).

செப்ரெம்பர் 07 முதல் 09 வரை வவுனியாவிலும் (Vavuniya), செப்டெம்பர் 10 முதல் 12 வரை திருகோணமலையிலும் (Trincomalee), செப்ரெம்பர் 13 முதல் 14 வரை அம்பாறையிலும் (Ampara), செப்ரெம்பர் 15 முதல் 19 வரை மட்டக்களப்பிலும் (Batticaloa) பொதுவேட்பாளர் கலந்துகொள்ளும் கூட்டங்கள் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version