பங்களாதேஷ் (Bangladesh) அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு விரைவாகத் திரும்பும் என தாம் நம்புவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி (Ali Sabry) தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தமது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்ட பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பங்களாதேஷுடனான நீடித்த நட்புறவைத் தொடர்ந்தும் மதிப்பதாகவும் இந்த சவாலான தருணங்களில் பங்களாதேஷ் மக்களுடன் இலங்கை இருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாதிக்கப்பட்ட மக்கள்
இதேவேளை பங்களாதேஷில் பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த குடும்பங்களுக்காகப் பிரார்த்திப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அங்கு அமைதி மற்றும் செழிப்பு நிறைந்த எதிர்காலத்தைத் தாம் எதிர்பார்ப்பதாகவும், இலங்கை வெளிவிவகார அமைச்சர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Our hearts are with the people of #Bangladesh during these incredibly challenging times. The recent events have led to significant unrest and, tragically, the loss of many lives. We extend our deepest sympathies to the families of those affected and to all who are suffering…
— M U M Ali Sabry (@alisabrypc) August 5, 2024