Home சினிமா பரோஸ் திரை விமர்சனம்

பரோஸ் திரை விமர்சனம்

0

கம்ப்ளிட் ஆக்டர் என பெயர் எடுத்த மிகச்சிறந்த நடிகராக மோகன்லால் நடித்து இயக்கிய பரோஸ் படம் எப்படியுள்ளது என்பதை பார்ப்போம்.

கதைக்களம்

டி காமா மாகாராஜாவின் புதையலை 400 ஆண்டுகளாக பாதுக்காத்து வருகிறது பரோஸ்(மோகன் லால்) என்ற பூதம்.

கோவாவில் ஒரு அருங்காட்சியகம் அடியில் இருக்கும் பூதம் 400 வருடத்திற்கு ஒரு முறை வரும் பௌர்ணமி அன்றிலிருந்து 3 நாளுக்குள் தான் காத்து வந்த புதையலை அந்த சொந்த புதையலுக்கு சொந்தக்காரரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அப்படி ஒப்படைக்க வில்லை என்றால் காலம் முழுவதும் அந்த பாதளத்தில் பூதம் அடைந்துவிடும், அதே நேரத்தில் அந்த புதையலை எடுக்க ஒரு கும்பல் முயற்சி செய்ய, பரோஸ் புதையலை சரியான ஆளிடம் ஒப்படைத்தாரா என்பதே மீதிக்கதை.

படத்தை பற்றிய அலசல்

மோகன் லால் முதன் முறையாக இயக்குனர் ஆகிறார் என்றதும் கண்டிப்பாக மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு வந்தது, முதல் படமே அடிதடி என ஆக்‌ஷன் அவதாரம் எடுப்பார் என்று பார்த்தால், குழந்தைகளுக்கான ஒரு பேண்டசி கதையை எடுத்துள்ளார். அதற்காகவே பாராட்டுக்கள்.

மோகன் லாலுமே பூதமாக தோன்றும் காட்சிகளில் வழக்கம் போல் தன் நடிப்பால் அசத்துகிறார், அவருக்கு துணையாக வரும் ஒரு உயிருள்ள குட்டி பொம்மை வுடோ-வும் குழந்தைகளை கவரும், அதன் சிஜி ஒர்க்-சும் அருமை.

இஸபெல்லாக வரும் வெளிநாட்டு சிறுமி துறு துறை நடிப்பால் கொஞ்சம் ரசிக்க வைக்க, மற்ற எல்லோரின் நடிப்பும் படு செயற்கை தான்.

அஜித் எடுத்த அதிரடி முடிவு.. மீண்டும் ஆதிக் உடன் கூட்டணி! உருவாகும் மார்க் ஆண்டனி 2

அதிலும் சோமசுந்தரம் எல்லாம் எவ்வளவு யதார்த்தமான நடிகர், இதில் காமெடியன் போல் வருகிறார், சிரிப்பும் வரவில்லை. பூதம், புதையல், அதை தேடும் கெட்டவர்கள் என படு சுவாரஸ்யமான கதையில் ஆமையை விட மெதுவாக நகரும் திரைக்கதை வீணாக்குகிறது.

நிறைய பேண்டசி விஷயங்களை செய்யும் களம் இருந்தும், பெரிதாக ஏதும் செய்யாமல் வசனங்களாகவே காட்சிகள் நகர்வது இரண்டாம் பாதியில் கால் மணி நேரம் கிட்ட ஸ்பானிஷ் மொழியிலேயே பேசுவது எல்லாம் பொறுமையை சோதிக்கிறது.

மோகன் லால் பூதம் ஆன கதையெல்லாம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. படத்தின் 3D படு சொதப்பல், ஒரு கட்டத்தில் தலைவலி வரும்படி உள்ளது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு அவர் தானா என கேட்க வைக்கிறது, லிடியன் இசை ஹாலிவுட் படம் போல் அசத்தியுள்ளார்.  

க்ளாப்ஸ்

கதைக்களம்

மோகன் லால்

பின்னணி இசை


பல்ப்ஸ்

பொறுமையை சோதிக்கும் திரைக்கதை

மொத்தத்தில் இந்த பேண்டசி கதையை கேட்டால் சுவாரஸ்யம், பார்த்தால் படம் முடியும் போது பல மணி நேரம் படம் பார்த்த உணர்வை தருகிறது. 

NO COMMENTS

Exit mobile version