Home இலங்கை சமூகம் நாட்டில் மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு – அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

நாட்டில் மோசமடையும் தேங்காய் தட்டுப்பாடு – அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

0

புதிய இணைப்பு

அடுத்த சில மாதங்களுக்குள் 200 மில்லியன் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதிக்குமாறு இலங்கை தென்னை கைத்தொழில் சபை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போதைய தேங்காய் தட்டுப்பாட்டிற்கு உரங்களின் விலையேற்றமே பிரதான காரணம் என அதன் தலைவர் ஜெயந்த சமரகோன் (Jayantha Samarakoon) குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் தேங்காய் சார்ந்த பொருட்கள் ஏற்றுமதி தொழில் துறைக்குத் தேவையான தேங்காய் இருப்புக்களை அவசரமாக இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால்இ நாடு சுமார் 1 பில்லியன் டொலர் வருவாயை இழக்க நேரிடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முதலாம் இணைப்பு

வடக்கில் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்க அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றும் போதே பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர்  இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

தென்னை தோட்டங்களுக்கு இலவச உரம் 

அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கு தென்னை முக்கோண வலயத்தில் 40,000 ஹெக்டயர் தென்னை மர பயிர்செய்கைக்காக 2025 வரவு செலவுத் திட்டத்தின் மூலம் அரசாங்கம் 1,437 மில்லியன் ரூபாய் ஒதுக்கியுள்ளது.

அத்துடன், நாட்டில் 5 ஹெக்டயருக்கும் குறைவான தென்னை தோட்டங்களுக்கு இலவச உரம் வழங்கவும் அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ரஷ்யாவிலிருந்து பெறப்பட்ட 55,000 மெட்ரிக் தொன் உரத்தில் 27,500 மெட்ரிக் தொன் உரத்தை தேங்காய் பயிர்செய்கைக்காக ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version