Home ஏனையவை வாழ்க்கைமுறை நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு…! 7 மூலிகைகள் கலந்த ஆயுர்வேத எண்ணெய்

நீளமான மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு…! 7 மூலிகைகள் கலந்த ஆயுர்வேத எண்ணெய்

0

அழகிய நீளமான கூந்தல் என்பது அனைத்து பெண்களினதும் பெரிய கனவாகவே காணப்படுகின்றது.

ஆனால் அதனை பெற்றுகொள்வதற்கான நடவடிக்கை என்பது மிகவும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாகவே உள்ளது.

இந்நிலையில், எவ்வித செயற்கையான நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் இயற்கையான முறையில் நீளமான கூந்தலை எவ்வாறு பெறலாம் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விளக்கெண்ணெய் 

அகலமான பாத்திரம் ஒன்றை எடுத்து அதில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் மற்றும் ஆலிவ் எண்ணெய் மூன்றையும் நன்றாகக் கலந்து கொள்ளவும்.

கூந்தலுக்குப் பயன்படுத்த வேண்டிய எண்ணெய் தயார் இப்போது இதனுடன் மூலிகைகளைச் சேர்க்கும் முறையைப் பார்க்கலாம்.

வெந்தயத்தை இலேசாகப் பொடித்து இந்த எண்ணெயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இவை எண்ணெயில் ஊறும் போது இதன் எசன்ஸ் நன்றாக இறங்கச் செய்யும்.

நெல்லிக்காய் பொடி

கறிவேப்பிலை மற்றும் வேப்பிலை இரண்டையும் காம்பு நீக்கி இலைகளை அலசித் தண்ணீர் உலரும் வரை காயவிடவும்.

பிறகு அதைப்பொடியாக நறுக்கி எண்ணெயில் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

இவை ஊறும் போது இதன் பண்புகள் எண்ணெயில் இறங்கும்.

பிறகு கரிசலாங்கண்ணி மற்றும் நெல்லிக்காய் பொடி இரண்டையும் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.

செம்பருத்திப் பூவின் இதழ்களை மட்டும் எடுத்துப் பொடியாக நறுக்கி அதையும் எண்ணெயில் சேர்க்கவும்.  

கண்ணாடி பாட்டில் 

எண்ணெயில் அனைத்துப் பொருள்களையும் சேர்த்த பிறகு 30 நிமிடங்கள் வரை வைத்திருந்து பிறகு அடுப்பில் மிதமான தீயில் எண்ணெயை வைத்துச் சூடேற்றவும்.

20 நிமிடங்கள் வரை சூடேறினால் போதும்.

அடுப்பை உச்சத்தில் வைத்து எண்ணெய் காய்ச்ச வேண்டாம்.

பிறகு இறக்கி எண்ணெயை ஆறவிடவும்.

எண்ணெயை வடிகட்டி பிறகு அதனுடன் எசன்ஷியல் ஆயில் (Essence oil) சேர்த்துக்கண்ணாடி பாட்டிலில் ஊற்றிப் பயன்படுத்தவும்.

Source: https://ibctamil.com/article/best-herbal-ayurvedic-oil-for-hair-growth-1779486537

NO COMMENTS

Exit mobile version