Home உலகம் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பைடனின் பிள்ளைகளின் பாதுகாப்பு நீக்கம்

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பைடனின் பிள்ளைகளின் பாதுகாப்பு நீக்கம்

0

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோபைடனின் இரண்டு பிள்ளைகளுக்குமான இரகசிய சேவை பாதுகாப்பு நீக்கப்படுவதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப்(donald trump) தெரிவிக்கையில்

ஜோபைடனின்(joe biden) மகன் ஹண்டர், மகள் ஆஷ்லே ஆகியோருக்கு வழங்கப்பட்ட இரகசிய சேவை பாதுகாப்பை இரத்து செய்யப்படுகிறது.

நீண்ட காலமாக இரகசிய சேவை பாதுகாப்பு 

“ஹண்டர் பைடனுக்கு நீண்ட காலமாக இரகசிய சேவை பாதுகாப்பு உள்ளது. இதற்கு அமெரிக்க வரி செலுத்துவோர் பணம் செலுத்தியுள்ளனர்.

அவர் இந்த வாரம் தென்னாபிரிக்காவில் இருந்தபோது பாதுகாப்புப் பிரிவில் 18 முகவர்கள் நியமிக்கப்பட்டனர். இது அபத்தமானது.

உடன் நடைமுறைக்கு வரும் வகையில் பாதுகாப்பு நீக்கம்

“இதையடுத்து, உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில், ஹண்டர் பைடன் இனி இரகசிய சேவை பாதுகாப்பைப் பெறமாட்டார். அதேபோல் ஆஷ்லே பைடனுக்கு பாதுகாப்பு சேவை நீக்கப்படுகிறது” என தெரிவித்துள்ளார்.  

முன்னதாக தனது பதவிக்காலத்தின் இறுதி நேரத்தில் பைடன் அளித்த பொதுமன்னிப்பையும் ட்ரம்ப் இரத்து செய்தமை குறிப்பிடத்தக்கது. 

NO COMMENTS

Exit mobile version