இலங்கையில் நீண்ட தூரம் பயணிக்கும் தொடருந்துகளின் முன்பதிவு பயணச்சீட்டுக்களை கொள்வனவு செய்து பாரிய மோசடி ஒன்று இடம்பெற்றுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட ஒரு குழுவினர் நீண்ட தூரம் பயணிக்கும் தொடருந்துகளில் பயணச்சீட்டுக்களை முன்பதிவு செய்து அவற்றை வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான மோசடிகளில் ஈடுபட்டு பயணிகளை சிரமத்துக்கு உள்ளாக்கியவர்களின் தொலைபேசி இலக்கங்கள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
பயணசீட்டு மீளாய்வு
இதன் மூலம், இந்த மோசடியுடன் தொடர்புடைய அனைவரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும் எனவும் குணசேன கூறியுள்ளார்.
மேலும், முன்பதிவு செய்யப்பட்ட பயணசீட்டுக்களை மீளாய்வு செய்வதை கடுமையாக்குவதற்கு சம்பந்தப்பட்ட துறைகளை அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.