Home சினிமா கைதுக்கு பயந்து நடிகர் மோகன் பாபு செய்த செயல்! பத்ரிகையாளர்களை தாக்கியதால் சர்ச்சை

கைதுக்கு பயந்து நடிகர் மோகன் பாபு செய்த செயல்! பத்ரிகையாளர்களை தாக்கியதால் சர்ச்சை

0

நடிகர் மோகன் பாபு மற்றும் அவர் மகன் மஞ்சு மனோஜ் ஆகியோர் இடையேயான சொத்து தகராறு தீவிரமாக நடந்து வருகிறது. இருவரும் மாறி மாறி போலீசில் புகார் அளித்து இருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று மோகன் பாபு வீட்டுக்கு செய்தி சேகரிக்க சென்ற பத்ரிகையாளர்களை மோகன் பாபு விரட்டி விரட்டி தாக்கி இருந்தார்.

அந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி இருந்த நிலையில் மோகன் பாபு மீது போலீசார் வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர். மோகன் பாபுவை கைது செய்ய வேண்டும் என பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.

மருத்துவமனையில் அட்மிட்

மோகன் பாபு கைது செய்யப்படலாம் என தகவல் வெளியான நிலையில் தற்போது அவர் மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார். 

கைதுக்கு பயந்து அவர் இப்படி செய்திருக்கிறாரா என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version